கால்நடை மருத்துவ முகாம்

கால்நடை மருத்துவ முகாம்
கால்நடை மருத்துவ முகாம்
Published on

வேதாரண்யம் தாலுகா செம்போடை ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் தொடங்கி வைத்தார். இதில் கால்நடை உதவி டாக்டர்கள் சண்முகநாதன், முருகேசன் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல், பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்கம், குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சை அளித்தனர். முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் பரிசு வழங்கினார்.

இதில் கால்நடை ஆய்வாளர் மாசிலாமணி மற்றும் வார்டு உறுப்பினர்கள், கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com