கால்நடை மருத்துவ முகாம்

பாப்பாக்குடியில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
கால்நடை மருத்துவ முகாம்
Published on

முக்கூடல்:

தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் பாப்பாக்குடியில் நடைபெற்றது. அம்பாசமுத்திரம் மற்றும் சேரன்மாதேவி கால்நடை பராமரிப் புத்துறை உதவி இயக்குனர் தங்கராஜ் வரவேற்றார். பாப்பாக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஆனைக்குட்டி பாண்டியன், நெல்லை கால்நடை பராமரிப்பு துணை இயக்குனர் ரோஜர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாப்பாக்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இசக்கியம்மாள் மணிகண்டன் வாழ்த்துரை வழங்கினார். டாக்டர் ஜான்சுபாஷ் தொழில்நுட்ப உரை ஆற்றினார். முக்கூடல் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் ஷேமாசாயி நன்றிகூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com