கால்நடை மருத்துவப் படிப்பு - நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு, நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்' என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை அறிவித்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் உள்ளிட்ட ஏழு இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லுரிகள் உள்ளன. இந்த கல்லுரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட, 'பி.வி.எஸ்சி., - ஏ.ஹெச்' என்ற கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு, 660 இடங்கள் உள்ளன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 63 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள, 597 இடங்கள் மாநிலஒதுக்கீட்டில் உள்ளன.

அதேபோல், பால்வள, கோழியின உற்பத்தி, உணவு தொழில்நுட்ப படிப்புகளுக்கு 140 இடங்கள் உள்ளன. இவற்றில், ஆறு இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு செல்கிறது. மீதமுள்ள, 134 இடங்கள் மாநிலஒதுக்கீட்டில் உள்ளன.

இந்த மாநில ஒதுக்கீட்டிற்கான, பி.வி.எஸ்சி., - ஏ.ஹெச்., மற்றும் பி.டெக்., படிப்புகளுக்கு 2023 - 24ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் நாளை காலை 10:00 ணி முதல் 30ம் தேதி மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்திய வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோர்களுக்கான இட ஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விபரங்களையும், இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com