

சென்னை,
துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் இன்று தமிழகம் வருகை தர உள்ளார்.
துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன். அவர் இன்று தமிழகம் வர உள்ளார். விமானம் மூலம் சென்னை வரும் சிபி ராதாகிருஷ்ணனை அதிகாரிகள் வரவேற்க உள்ளனர்.
இதனை தொடர்ந்து, சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள கொட்டிவாக்கத்தில் நெல்லை நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 42-வது ஆண்டு விழாவில் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார். இன்று மதியம் 2.30 மணியளவில் நடைபெறும் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்கும் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் பின்னர் நெல்லை நாடார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியையும் திறந்து வைக்கிறார்.
பின்னர், சென்னை நீலாங்கரையில் இன்று மாலை நடைபெறும் தேமுதிக பொருளாளர் சுதீசின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் கலந்துகொள்ள உள்ளார்.
சிபி ராதாகிருஷ்ணன் இன்று சென்னை வர உள்ள நிலையில் அவர் பயணிக்கும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.