துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை சென்னை வருகை


துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை சென்னை வருகை
x

மத்திய மந்திரி எல். முருகன், இசைஞானி இளையராஜா ஆகியோர் பாராட்டு உரை வழங்குகிறார்கள்.

சென்னை,

துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தன. 2 முறை அந்த நிகழ்ச்சி தள்ளிப் போனது. இந்தநிலையில் முதல் முறையாக நாளை அவர் சென்னை வருகிறார்.

அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க தமிழக பா. ஜனதா ஜனதா கட்சியினரும் சென்னை குடியிருப்போர் நலச்சங்கத்தினரும் ஏற்பாடுகள் செய்து உள்ளனர். மாலை 5 மணி அளவில் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பில் கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடக்கிறது. விழாவுக்கு முன்னாள் அமைச்சர் ஹண்டே தலைமை தாங்குகிறார். எம். ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகிக்கிறார்.

மத்திய மந்திரி எல். முருகன், இசைஞானி இளையராஜா ஆகியோர் பாராட்டு உரை வழங்குகிறார்கள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் டி.என். வள்ளிநாயகம், ஜோதிமணி, எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழக வேந்தர் பாரி வேந்தர், வேல்ஸ் பல்கலைக் கழக வேந்தர், ஐசரி கணேஷ், இயக்குனர் பாக்கியராஜ், தமிழ்நாடு டாக்டர் எம். ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர், டாக்டர் சுதா சேஷையன், டாக்டர் சொக்க லிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். முடிவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.

முன்னதாக நாளை காலை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தில் நடக்கும் பட்டமளிக்கும் விழாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.

1 More update

Next Story