

மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்றுள்ளது. கடந்த பதினைந்து வருடங்களாக அங்கு ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்து இருக்கின்றது. இதையடுத்து பாஜகவின் சட்டமன்ற குழு தலைவராக சுவேந்து அதிகாரி அக்கட்சியின் எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆட்சி அமைக்க சுவேந்து அதிகாரி உரிமை கோரினார். பின்னர் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்த நிலையில், இன்று மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்.
சென்னை,
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதில் தெரிவித்திருப்பதாவது:-
மேற்கு வங்காளத்தின் முதல்-மந்திரியாக சுவேந்து அதிகாரி பொறுப்பேறுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடி இயக்கமான ஜனசங்கத்தின் நிறுவனரான டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜியின் சொந்த மாநிலமான மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
35 ஆண்டுகால கம்யூனிஸ்ட், 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸின் கொடுங்கோல் ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். பாஜக ஆட்சியில் இனி வங்கம் வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாறும்.
இந்த வரலாற்று வெற்றிக்கு காரணமான பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், மேற்குவங்க பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி. முதல்-மந்திரி சுவேந்து அதிகாரிக்கும் அவரது அரசுக்கும் வாழ்த்துகள்.
வங்கத்தில் பாஜகவின் வெற்றி இந்திய அரசியலில் பாஜகவுக்கு இன்னும் பல்லாண்டுகளுக்கு நிலைத்த இடத்தை பெற்றுத்தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.