உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் அடிதடி... வீடியோ காட்சிகள்

இந்த திடீர் மோதல் காரணமாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி,
உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் இரு தரப்பினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் பலரும் கடும் அவதி அடைந்தனர். இதனால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
முதற்கட்ட தகவலாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இரு தரப்பினர் இடையே ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் மற்றொரு தரப்பினரும் அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தனர். இதனால் மீண்டும் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு மோதல் வெடித்தது. இந்த திடீர் மோதல் காரணமாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த மோதல் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.