

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது;
தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. அதிலும் குறிப்பாகச் சட்டமன்றத்தில் இல்லாத ஒருவரைப் பற்றி, "அப்பாவைக் காணோம்" என்று கேலி செய்யும் வகையில் முதலமைச்சர் பேசியது மிகவும் தவறானது. இதற்கு எதிர்வினையாக, எதிர்க்கட்சித் தலைவர் "கணவனைத் தேடும் மனைவி" என்று பேசியதும் தவறுதான். "ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்" என்பதை உணர்ந்து இருதரப்பினரும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்'இவ்வாறு அவர் கூறினார்.
முதல்-அமைச்சர் விஜய், சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையை நிறைவு செய்யும் போது, 'எதிர்க்கட்சியினர் அவையில் இருந்திருந்தால் ஒரு 'ஆக்ஷன்' பண்ணனும் என தோன்றியது. எல்லோரும் போய்விட்டார்கள். உங்கள் (பேரவைத் தலைவர்) அனுமதியுடன் அதை பண்ணலாமா?' என கேட்டார். அதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், 'இப்பவும் பண்ணலாம் தப்பில்லை' என்றார்.
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி தி.மு.க.-காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து வெளியே வந்த அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையை அசைத்து ஒரு சைகை காட்டியிருந்தார். இது அப்போது சமூக வலைதளங்களில் 'டிரெண்ட்' ஆனது. அதே சைகையைதான் முதல்-அமைச்சர் விஜய் சட்டசபையில் செய்து காண்பித்து தன் னுடைய உரையை நிறைவு செய்து இருக்கையில் அமர்ந்தார். இதுவும் நேற்று சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரல் ஆனது.
முதல் அமைச்சர் விஜய்யின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில், உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு விமர்சனத்திற்கு உள்ளானது. உதயநிதி கூறியதாவது: சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்" என்று பதிவிட்டு இருந்தார்.