

வேலூர்
தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நந்தகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியின் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நந்தகுமார். இந்த நிலையில், காட்பாடி காந்திநகரில் உள்ள நந்தகுமாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நகராட்சித்துறை அமைச்சராக கே.என்.நேரு. இருந்த நிலையில், நகராட்சித்துறையில் நடந்த 2 ஆயிரத்து 538 பணியிடங்கள் நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சப்பணம் கைமாறியுள்ளதாக தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில், கே.என்.நேருவின் வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி திருச்சி மற்றும் சென்னையில் உள்ள வீடுகளில் சொதனை நடந்து வருகிறது. 25 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.
கடந்த செப்டம்பர் 5-ந்தேதி கே.என்.நேருவின் வீடு உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில், லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட விவரங்கள் சிக்கின. இதுதொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுகிறது என கூறப்படுகிறது. இந்த 2-வது கட்ட சோதனையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நேரு சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
கே.என்.நேரு தொடர்புடைய இடத்தில் சோதனை நடைபெறும் நிலையில் நந்தகுமார் வீட்டிலும் இன்று காலை முதல் சோதனை நடந்து வருகிறது.