சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு

சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு
Published on

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ரெயில் நிலையங்களில் உள்ள குப்பைதொட்டிகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவைகள் மட்டுமல்லாது ரெயிலில் பயணிக்கும் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் வெடிகுண்டு கருவி மூலம் தீவிரசோதனை செய்து வருகின்றனர்.

சந்தேகப்படும் படியான பொருட்கள் இருந்தால் உடனடியாக திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருவள்ளூர்- அரக்கோணம் ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com