நகர ஊரமைப்பு அலுவலகத்தில் 2¾ மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தஞ்சை மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் 2¾ மணி நேரம் சோதனை நடத்தினர்.
நகர ஊரமைப்பு அலுவலகத்தில் 2¾ மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
Published on

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் 2 மணி நேரம் சோதனை நடத்தினர்.

நகர ஊரமைப்பு அலுவலகம்

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை கணபதி நகரில் மாவட்ட நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மனைப்பிரிவுகளுக்கு அனுமதி அளித்தல், மனை வகைப்பாடு மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.இந்த அலுவலகத்தில் முறைகேடுகள் நடப்பதாக தஞ்சை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினர்.

2 மணி நேரம் சோதனை

லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சரவணன் தலைமையில் போலீசார் நேற்று மாலை 4 மணி முதல் சோதனை நடத்தினர். இந்த சோதனை மாலை 6.45 மணி வரை நீடித்தது.இந்த சோதனையில் குறிப்பிடும் விதமான ஆவணங்கள், ரொக்கம் எதுவும் சிக்கவில்லை என லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர். லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரின் திடீர் சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com