சென்னையில் நாளை 2 இடங்களில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி - எங்கெங்கே தெரியுமா?

4 இடங்களில் அனுமதி கேட்கப்பட்ட நிலையில், 2 இடத்திற்கு அனுமதி
சென்னையில் நாளை 2 இடங்களில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி - எங்கெங்கே தெரியுமா?
Published on

சென்னை,

தவெக தலைவர் விஜய் நாளை மீண்டும் சென்னையில் பிரசாரம் செய்ய இருக்கிறார், சென்னையில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து அவர் ஆதரவு திரட்டுகிறார். நாளை காலை 11 மணிக்கு விஜய் வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து பிரசாரம் தொடங்குகிறார். வில்லிவாக்கம் தொகுதியில் டி.வி. நகர் திருமங்கலம் பாலம் அருகே பிரசாரம் செய்கிறார்.

அதன்பின்பு அங்கிருந்து விஜய் தி.நகர் தொகுதிக்கு செல்கிறார். தி.நகர் முத்துரங்கன் சாலையில் நடைபெற உள்ள பிரசார கூட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசும் விஜய், பொதுச்செயலாளர் என்.ஆனந்துக்கு ஆதரவு திரட்டுகிறார். தி.நகர் தொகுதியில் பிரசாரத்துக்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் தி.நகர் அப்புனு செய்து வருகிறார். நான்கு இடங்களில் அனுமதி கேட்கப்பட்ட நிலையில் இரண்டு இடத்திற்கு மட்டும் மாவட்ட தேர்தல் அதிகாரி அனுமதி அளித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com