விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணிக்கலாம்

நந்தனத்தில் 13.06.2026 அன்று விஜய் ஆண்டனியின் நேரடி இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
மெட்ரோ ரெயில்
Published on

சென்னை,

சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இசை நிகழ்ச்சி

நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு அருகில் உள்ள YMCA கல்லூரி மைதானத்தில், 13.06.2026 (சனிக்கிழமை) அன்று விஜய் ஆண்டனியின் - நேரடி இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தென்னிந்தியாவின் முன்னணி ஊடக தயாரிப்பு நிறுவனமான Noice & Grains Private Limited உடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்துள்ளது.

Noice & Grains Private Limited நிறுவனம் ஆனது விஜய் ஆண்டனியின் - நேரடி இசைநிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு மெட்ரோ ரெயிலில் இலவசமாகப் பயணம் செய்ய ஸ்பான்சர் செய்கிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் வழங்கப்படும் நிகழ்ச்சி நுழைவு சீட்டானது (தனித்துவமான QR குறியீடுகள்)மெட்ரோ பயண சீட்டாகவும் (Metro Ticket) செயல்படும். பயனாளர்கள் இந்த நுழைவு மெட்ரோ பயணசீட்டை நிகழ்ச்சி நடைபெறும் நாளான 13.06.2026 அன்று ஒரு சுற்று பயணத்திற்கு மட்டும் பயன்படுத்தலாம்(2 நுழைவு, 2 வெளியேறு).

கட்டணமில்லா பயணம்

இந்த பிரத்யேக QR குறியீடு கொண்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி நிகழ்வு நடைபெறும் நாளான 13.06.2026 அன்று சென்னையில் செயல்படும் எந்த ஒரு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்தும் நிகழ்வுநடைபெறும் இடத்திற்கு மிக அருகில் உள்ள நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு சென்று திரும்பமுடியும். இசை நிகழ்ச்சிக்கு வருபவர்கள் தங்கள் பயணச்சீட்டுகளில் உள்ள தனித்துவமான QR குறியீட்டைதானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம்.

நிகழ்ச்சி முடிந்து பார்வையாளர்கள் வீடு திரும்புவதற்காக, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம்நந்தனம் மெட்ரோ நிலையத்திலிருந்து மெட்ரோ ரெயில் சேவைகளை நீட்டித்துள்ளது.

• வழித்தடம் 1-ல் நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரெயில் நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ ரெயில் நள்ளிரவு 12 மணிக்கும்,

• வழித்தடம் 1-ல் நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலைய மெட்ரோ ரெயில்நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ ரெயில் நள்ளிரவு 12 மணிக்கும் புறப்படும்.

• வழித்தடம் 2-ல் பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள், புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில்மட்டுமே மாறி செல்லலாம்.

• பயணிகள் கடைசி மெட்ரோ ரெயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே நந்தனம்மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பயணிகள் இந்த பயணச் சலுகையை முழுமையாகப் பயன்படுத்தி, பாதுகாப்பாகவும் நெரிசல் இல்லாமலும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து நிகழ்ச்சிகளுக்கு செல்லவழிவகை செய்கிறது.

பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும், மாநகரின் போக்குவரத்து நெரிசலைக்குறைப்பதற்கும் இதுபோன்ற ஒத்துழைப்பை வழங்க சென்னையில் உள்ள மற்ற பெரிய நிகழ்வு அமைப்பாளர்களையும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அழைக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com