கோவை வந்தார் விஜய்... குவிந்த த.வெ.க.வினர், ரசிகர்கள் - ஸ்தம்பித்த ஏர்போர்ட்

விமான நிலைய வளாகத்தில் தொண்டர்களை நோக்கி விஜய் கையசைத்தார்.
கோவை,
த.வெ.க.வின் பூத் கமிட்டி கருத்தரங்கு நடத்தும் பணியில் அக்கட்சியின் தலைவர் விஜய் ஈடுபட்டு வருகிறார். இதில் முதற்கட்டமாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த த.வெ.க. பூத் கமிட்டி கோவை அருகே குரும்பபாளையத் தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
கருத்தரங்கில் த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் கலந்துகொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவர், கோவை விமான நிலையம் வந்து சேர்ந்தார். விமான நிலையம் வந்துள்ள விஜய்யை வரவேற்பதற்காக தவெக தொண்டர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் விமான நிலையத்தில் வழி நெடுகிலும் குவிந்துள்ளனர்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் காத்து நிற்கின்றனர். குறிப்பாக விமான நிலைய வளாகத்திலேயே சுமார் 2 ஆயிரம் பேர் குவிந்துள்ளனர். விமான நிலைய வளாகத்தில் தொண்டர்களை நோக்கி விஜய் கையசைத்தார்.
தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் கூட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.






