அரசியல் பலத்தை பறைசாற்ற விஜய் காலதாமதமாக வந்தார்: போலீஸ் எப்.ஐ.ஆரில் தகவல்


அரசியல் பலத்தை பறைசாற்ற விஜய் காலதாமதமாக வந்தார்: போலீஸ் எப்.ஐ.ஆரில் தகவல்
x

மெயின்ரோடு வழியாக வந்து காலதாமதமாக வந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தி நிபந்தனையை மீறினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்,

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக போலீசார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தனர். இந்த FIR-ல் பரபரப்பு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கரூரில் தனது அரசியல் பலத்தை பறைசாற்ற விஜய் திட்டமிட்டு காலதாமதமாக வந்தார். மரங்களிலும், கடை கொட்டகைகளிலும் தொண்டர்கள் ஏறி அமர்ந்தனர். பல இடங்களில் நிபந்தனைகள் மீறப்பட்டன. தவெக நிர்வாகிகள் இதை கண்டு கொள்ளவில்லை. மெயின்ரோடு வழியாக வந்து காலதாமதமாக வந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தி நிபந்தனையை மீறினர்.

மரக்கிளை முறிந்ததால் கீழே நின்றவர்கள் மீது விழுந்தனர். ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரிடம் பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லை; நீண்ட நேரம் காத்திருந்தனர். தண்ணீர், மருத்துவ வசதி இல்லை. கூட்ட நெரிசலால் ஏற்பட்ட அழுத்தத்தால் மக்கள் உடல் நிலை சோர்வு ஏற்பட்டது. கீழே விழுந்தவர்கள் மிதிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்” என்பது உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

1 More update

Next Story