கரூரில் விஜய் பிரசாரம்: நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தடயவியல் குழுவினர் ஆய்வு

கரூரில் நிகழ்ந்த துயர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
கரூரில் விஜய் பிரசாரம்: நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தடயவியல் குழுவினர் ஆய்வு
Published on

கரூர்,

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மேலும் பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூரில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கரூரில் விஜய் பிரசாரம் செய்த வேலுச்சாமிபுரத்தில் கரூர் மாவட்ட தடயவியல் குழுவினர் ஆய்வு செய்தனர். நெரிசல் ஏற்பட்ட இடம், வாகனங்கள் வந்த இடங்களில் 3 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது சம்பவ இடத்தில் இருந்த அனைத்தையும் வீடியோவாகவும், புகைப்படமாகவும் பதிவு செய்து கொண்டனர். மேலும் பிரசாரத்திற்கு வந்தவர்கள் தவறவிட்ட பொருட்கள், சந்தேகப்படும்படியான அனைத்து பொருட்களையும் தடவியல் குழுவினர் சேகரித்து எடுத்து சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com