'மிகவும் மன வேதனை அடைந்தேன்' - குமரி அனந்தன் மறைவுக்கு விஜய் இரங்கல்


Vijay condoles the death of Kumari Ananthan
x

வயது மூப்பு காரணமாக குமரி அனந்தன் (93) காலமானார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் (வயது 93), கடந்த சில வாரங்களுக்கு முன் உடல்நிலை மோசம் அடைந்ததால் சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு குமரி அனந்தனின் உயிர் பிரிந்தது.

இதனையடுத்து, பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தற்போது தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

'ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி, நம் கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் சேர்ந்து பயணித்து மக்கள் சேவையாற்றியவர். மது ஒழிப்பிற்காக தம் வாழ்நாள் முழுவதும் போராடியவர். தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக, ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக நேர்மையுடன் பணியாற்றியவர்.

எளிமையாக மக்களோடு மக்களாக வாழ்ந்த அய்யா குமரி அனந்தன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

1 More update

Next Story