சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு விஜய் வாழ்த்து

இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் உரியது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு விஜய் வாழ்த்து
Published on

சென்னை,

டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றதுடன், சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்திய அணிக்கு அரசியல் பிரபலங்கள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு, தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”மீண்டும் சாம்பியன்கள்!

டி20 உலகக் கோப்பையை மீண்டும் வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! மைதானத்தில் உள்ள மன உறுதி முதல் மைதானத்தில் துடிக்கும் மில்லியன் கணக்கான இதயங்கள் வரை, இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் உரியது. உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்!”

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com