விஜய் ஆதரவு கேட்டுள்ளார்: கே.சி.வேணுகோபால்

தவெகவுக்கு ஆதரவு தரும்படி விஜய் கேட்ட நிலையில் நாளை காலை 9.30 மணிக்கு முடிவெடுக்கிறது தமிழக காங்கிரஸ்.
விஜய் ஆதரவு கேட்டுள்ளார்: கே.சி.வேணுகோபால்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதாவது, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

பெரும்பான்மை என்பது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்றால், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பாதியான 117 தொகுதிகளைவிட ஒன்று கூடுதலாக இருக்க வேண்டும். அதாவது, 118 தொகுதிகள் வேண்டும். த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதால், அதில் திருச்சி கிழக்கு தொகுதியை அவர் ராஜினாமா செய்வார் என தெரிகிறது.

மேலும், பெரும்பான்மை வாக்கெடுப்பை நடத்த த.வெ.க.வில் இருந்து ஒருவர் தற்காலிக சபாநாயகராக இருக்க நேரிடும் என்பதால், அவரால் ஓட்டுபோட முடியாது. எனவே, த.வெ.க. ஆட்சியமைக்க இன்னும் 12 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

இந்தநிலையில், மெஜாரிட்டி இல்லாத நிலையில் முறையான அரசு அமைக்க விஜய் முனைப்பு காட்டி வருகிறார்.

டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி உடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களுடன் பேசிய கே.சி. வேணுகோபால் கூறியதாவது:-

தவெக ஆட்சி அமைக்க விஜய் எங்களிடம் ஆதரவு கோரியுள்ளார்.தமிழக மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாநில காங்கிரசே முடிவு எடுக்கும்.தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும்.

பெருந்தலைவர் காமராஜர்தான் தவெகவின் கொள்கை தலைவர்களுள் ஒருவராக இருக்கிறார். தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும். பாஜக அங்கம் வகிக்கும் அரசு வரக்கூடாது என்றார்.

தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து தமிழக காங்கிரஸ் முடிவெடுக்கலாம் என கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் சூழல் குறித்து ஆலோசிக்கப்பட்டு அதன் முடிவுகளை தேசிய தலைமைக்கு அனுப்பி வைக்க உள்ளோம். தவெக உடனான கூட்டணி குறித்து காங்கிரஸ் மேலிடம் தலைமை தான் முடிவெடுக்கும் என

காங்கிரஸ் தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com