விஜய் மீது 3 வழக்குகள் பதிவு விதிகளை மீறி பிரசாரம் செய்ததாக குற்றச்சாட்டு

பறக்கும்படை அதிகாரி சந்தோஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விஜய் மீது 3 வழக்குகள் பதிவு விதிகளை மீறி பிரசாரம் செய்ததாக குற்றச்சாட்டு
Published on

சென்னை,

த.வெ.க. தலைவர் விஜய் சென்னையில் தியாகராய நகர், ஆயிரம் விளக்கு. எழும்பூர் ஆகிய தொகுதிகளில் த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் மாலை சாலையில் ஊர்வலமாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பெரிய அளவில் கூட்டத்தை கூட்டி சாலையில் ஊர்வலமாக சென்று போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக விஜய் மீது மாம்பலம், நுங்கம்பாக்கம், வேப்பேரி ஆகிய 3 போலீஸ் நிலையங்களில் நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பறக்கும்படை அதிகாரி சந்தோஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். விஜய் மீது மட்டுமல்லாமல், தியாகராய நகர் தொகுதி த.வெ.க. வேட்பாளர் புஸ்சி ஆனந்த், த.வெ.க.வின் தென் சென்னை மாவட்ட செயலாளர் அப் புனு ஆகியோர் மீதும் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com