

கன்னியாகுமரி,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கன்னியாகுமரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
கருத்து கணிப்புகள் முறையாக இருந்தால் அதன்மீது நம்பிக்கை இருக்கும். ஆனால், அதிகமான இடங்களில் கருத்து திணிப்புதான் உள்ளது. திமுக கூட்டணி சார்பில் நிறைய கருத்து திணிப்பு வந்துள்ளது. கருத்து கணிப்பு குறித்து இப்போது பேச வேண்டிய அவசியமில்லை.
4ம் தேதி மக்களின் உண்மையான கருத்து கணிப்பு, மக்களின் உண்மையான எண்ணங்கள், கடந்த 5 ஆண்டுகள் திமுக எவ்வாறு மோசமான ஆட்சி நடத்தியது என்பதை 4ம் தேதி தெரிந்துகொள்ளலாம். விஜய் எந்த தொகுதியிலும் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை’ என்றார்.