‘விஜய் பேச்சில் அரசியல் மாண்பு இல்லை’ - காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் விமர்சனம்

விஜய்யின் பேச்சை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை என சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை ஆவடியில் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“த.வெ.க. தலைவர் விஜய் தனது எண்ணங்களை பொதுவெளியில் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் இன்னும் கூட அவரிடம் கொள்கை தெளிவு இல்லை. அவர்கள் எந்த கொள்கையில் நிற்கிறார்கள் என்பதை தெளிவாக கூறவில்லை.
மேலும், ஆரம்பத்தில் இருந்தே அவரது பேச்சுகளில் குறைந்தபட்ச அரசியல் மாண்பு என்பது இல்லை. அதை ஒரு குறையாகவே பார்க்க முடிகிறது. இதுபோன்ற போக்கை தமிழக மக்கள் என்றும் ஏற்றுக்கொண்டது இல்லை, அவரது பேச்சை யாரும் ஏற்றுக்கொள்ளப்போவதும் இல்லை.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story






