

சென்னை,
விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் நாளை தேர்தல் முடிவு வரவிருக்கும் நிலையில் தனது தொகுதியில் முகாமிட்டுள்ளார். தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பது பற்றி அவர் கூறியதாவது:-
இந்த தேர்தல் வித்தியாசமாக இருக்கிறது. அரசியலுக்கு விஜய்யின் வருகை இளைஞர்களிடம் அரசியல் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. பொதுவாக இளைஞர்கள் அரசியலில் அவ்வளவாக ஆர்வம் காட்ட மாட்டார்கள். தூரமாக இருந்துதான் பார்ப்பார்கள். ஆனால் இந்த தேர்தலில் ஆர்வமுடன் வந்தார்கள். இளைஞர்கள் அதிக அளவில் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம்
விஜய் பிரசாரத்தில் அதிக அளவில் இளைஞர்கள், பெண்கள் திரண்டதை பார்க்க முடிந்தது. 49 வயதுக்கு உட்பட்டவர்கள் வரை விஜய் கட்சிக்கு வாக்களித்ததாக கூறியிருக்கிறார்கள். தேர்தல் முடிவில் விஜய்யின் தாக்கம் நிச்சயம் இருக்கும். அதே நேரம் அ.தி.மு.க. கூட்டணிக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றார்.
பின்னர் அவரிடம் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் வைகோ, த.வெ.க. தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து உள்ளது.
ஆச்சரியமான முடிவுகளை கொடுக்கலாம் என்றும், கம்யூனிஸ்டு மூத்த தலைவர் பாலகிருஷ்ணன், ‘இளைஞர்கள் எழுச்சியோடு இருந்தனர். அவர்களில் ஒருசாரார் விஜய் பின்னால் சென்றனர்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்களே, இந்த மன மாற்றத்துக்கு என்ன காரணம் என்றதற்கு, இது மனமாற்றம் இல்லை. இந்த மாற்றத்தை இப்போதுதான் புரிந்து இருக்கிறார்கள் என்றார்.