‘அரசியலில் விஜய் தொட்டில் குழந்தை’: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்

வலுவான அரசியல் இயக்கமாக நடத்தக்கூடிய ஆற்றல் விஜயிடம் இருப்பது போல் தெரியவில்லை என்று ராஜேந்திர பாலாஜி கூறினார்.
‘அரசியலில் விஜய் தொட்டில் குழந்தை’: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்
Published on

சிவகாசி,

மதுரையில் நடந்த தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் விஜய், தி.மு.க. குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அதேபோல் அ.தி.மு.க.வின் தற்போதைய நிலை குறித்தும் விமர்சித்து இருந்தார். இதுதொடர்பாக சிவகாசியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

விஜய் இன்னும் விளையாட்டு பிள்ளையாக இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக மதுரை மாநாட்டில் அவரது நடவடிக்கை இருந்தது. வலுவான அரசியல் இயக்கமாக நடத்தக்கூடிய ஆற்றல் விஜயிடம் இருப்பது போல் தெரியவில்லை. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தினசரி ஒரு மாவட்டத்துக்கு சென்று வருகிறார். அப்படிப்பட்ட தலைவரை பற்றியும், அ.தி.மு.க.வை பற்றியும் விஜய் பேசுவது சிறுபிள்ளைத்தனமானது.

54 ஆண்டுகள் களம் பயின்று 31 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட அ.தி.மு.க.வை பற்றி குறைத்து மதிப்பிட்டு பேசுவது விஜயின் வீழ்ச்சிக்கு முதல் படி. விஜய்க்கு எந்த ஒரு வெற்றியும் கிடைக்கும் வாய்ப்பு அவரது பேச்சில் தெரியவில்லை. ஒன்றரை வயதுள்ள தொட்டில் குழந்தையாக இருக்கும் விஜய் அ.தி.மு.க.வின் தலைமையை பற்றி பேசுவது கேலிக்குறியது. இதேபோல் பேசிய அதிகம் பேரை நாங்கள் பார்த்துள்ளோம். அ.தி.மு.க.வை பற்றி சிறுபிள்ளைத்தனமாக பேசியவர்கள் எல்லாம் அடையாளம் தெரியாமல் போனதுதான் வரலாறு.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com