

கரூர்,
முதல்-அமைச்சர் விஜய்யின் வருகையையொட்டி, கரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கரூரில் விஜய்
கரூரில் தவெக சார்பில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று காலை 9 மணிக்கு நீலாங்கரை இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டார். காலை 9.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த அவர், காலை 9.30 மணிக்கு சிறப்பு விமானத்தில் திருச்சி புறப்பட்டு சென்றார். காலை 10.20 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்த முதல்-அமைச்சர் விஜய், அங்கிருந்து கரூருக்கு காரில் புறப்பட்டு சென்றார்.
காரில் முதல்-அமைச்சர் செல்லும் வழியெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் பின்னர் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் பேசினார். இதனை தொடர்ந்து கரூரில் அவர் ரோடு ஷோ மேற்கொண்டார். அப்போது சாலையின் இரு புறங்களிலும் சூழ்ந்திருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முதல்-அமைச்சர் விஜய்யின் காரில் மலர் தூவி, அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தானர். இதன் பின்னர் கரூரில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு முதல்-அமைச்சர் விஜய் சென்றார்.