டெல்லியில் இருந்து சென்னை கிளம்புகிறார் விஜய்

விஜயிடம் இன்று 3வது கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் நாளை விசாரணை இல்லையென தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் இருந்து சென்னை கிளம்புகிறார் விஜய்
Published on

சென்னை,

கரூர் நெரில் வழக்கு தொடர்பாக இன்று 3-வது முறையாக டெல்லியில் உள்ல சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் ஆஜரானார். அவரிடம் பல்வேறு வீடியோ ஆதாரங்களை காண்பித்து சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

காலை 9.30 மணி முதல் 7 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணை முடிந்து மாலை 6 மணிக்கு விஜய் வெளியே வந்தார். வெளியில் திரண்டிருந்த செய்தியாளர்கள், பொதுமக்களை பார்த்து திறந்த காரில் நின்றபடி சிரித்துக்கொண்டே கை அசைத்து சென்றார்.

இந்தநிலையில், விஜயிடம் இன்று 3வது கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் நாளை விசாரணை இல்லையென தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து விஜய் இன்று இரவு டெல்லியில் இருந்து சென்னை கிளம்புகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com