கவர்னர் ஆர்.என்.ரவியுடன் விஜய் சந்திப்பு - அண்ணாமலை வரவேற்பு

பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து, கவர்னரை சந்தித்து விஜய் பேசியிருப்பதை வரவேற்கிறோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கவர்னர் ஆர்.என்.ரவியுடன் விஜய் சந்திப்பு - அண்ணாமலை வரவேற்பு
Published on

சென்னை,

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை த.வெ.க. தலைவர் விஜய் இன்று சந்தித்து பேசினார். அப்போது 3 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவையும் விஜய் அளித்தார்.

இந்த சந்திப்பு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது, திமுக நிர்வாகி பாலியல் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், விசாரணை குறித்து முன்னுக்குப் பின் முரணாக, காவல்துறையும், அமைச்சர்களும் பேசி வருவதால், திமுக அரசின் விசாரணையில் நம்பிக்கையின்மை குறித்தும், தமிழக பாஜக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

இன்றைய தினம், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், சகோதரர் விஜய் , திமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து, கவர்னர் ஆர்.என்.ரவியைச் சந்தித்துப் பேசியிருப்பதை வரவேற்கிறோம். வழக்கை திசைதிருப்ப தொடர்ந்து முயற்சித்து வரும் திமுக அரசைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரனாக, அனைத்துக் கட்சியினரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நம் சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com