கடந்த 4 ஆண்டுகளில் நடந்த காவல் மரணங்கள்... குடும்பத்தினரை சந்திக்கும் விஜய்?


கடந்த 4 ஆண்டுகளில் நடந்த காவல் மரணங்கள்... குடும்பத்தினரை சந்திக்கும் விஜய்?
x

காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதிகேட்டு வருகிற 13-ம் தேதி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சென்னை,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார். தனது காரில் இருந்த நகைகள் மாயம் என மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்த பேராசிரியை நிகிதா என்பவர் அளித்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் விசாரிக்க அழைத்து சென்று தாக்கியதில் அஜித்குமார் இறந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் காவல்நிலைய மரணங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதிகேட்டு, வருகிற 13-ம் தேதி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்த சந்திப்பை விஜய் நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

காவல் நிலையங்களில் மரணம் அடைந்த 20-க்கும் மேற்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்கும் விஜய் அவர்களுக்கு நிதியுதவி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விசாரணையின் போது காவலர்களால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானவர்களையும் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story