ஈழத்தமிழருக்கு ஆதரவாக விஜய் பேச வேண்டும்: இலங்கை எம்.பி ராமநாதன் அர்ச்சுனா

ஈழத்தமிழருக்கு ஆதரவாக விஜய் பேச வேண்டும் என்று அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்த பிறகு இலங்கை எம்.பி கூறியுள்ளார்.
ஈழத்தமிழருக்கு ஆதரவாக விஜய் பேச வேண்டும்:  இலங்கை எம்.பி ராமநாதன் அர்ச்சுனா
Published on

தலைமை செயலகத்தில் அமைச்சர் ராஜ்மோகனை இலங்கை எம்.பி ராமநாதன் அர்ச்சுனா சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: முதல்வர் விஜய்யை சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கவில்லை. விஜய் முதல் அமைச்சராக பொறுப்பேற்கும் தருணத்தை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால், இலங்கை பாராளுமன்றத்தில் இருந்ததால் அதை பார்க்க முடியவில்லை.

தமிழ்நாட்டு மக்கள் வரலாறு காணாத மாற்றத்திற்காக வாக்களித்து இருக்கிறார்கள். இப்படி ஒரு மாற்றம் நடக்காது என்று பெரிய அரசியல் விற்பன்னர்கள் கூறினார்கள். ஆனால் நடக்கும் என்றே கூறிவந்தேன். எங்கள் இனம் அழியும் போது திமுக, அதிமுக அரசுகள் வேடிக்கை பார்த்தன. ஈழத்தமிழருக்கு ஆதரவாக விஜய் பேச வேண்டும். சீமான் வாக்கு வாங்க மட்டுமே ஈழத்தமிழர் பிரச்சினையை பேசினார். விஜய் சேவை தமிழ் பேசும் எல்லோருக்கும் தேவை. தமிழக மக்கள் மிகப்பெரிய மாற்றத்திற்கு வாக்களித்து இருக்கிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com