த.வெ.க. பெண் எம்.எல்.ஏ. குழந்தைக்கு பெயர் வைத்த விஜய்: என்ன பெயர் தெரியுமா?

தேர்தல் பிரசாரத்தின் போதே நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பல்லவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
த.வெ.க. பெண் எம்.எல்.ஏ. குழந்தைக்கு பெயர் வைத்த விஜய்: என்ன பெயர் தெரியுமா?
Published on

சென்னை,

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில், த.வெ.க. சார்பில் சென்னை திரு.வி.க. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், பல்லவி. தேர்தல் பிரசாரத்தின் போதே நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பல்லவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த உடனேயே, டி.வி.கே. என பெயர் வைக்கப்போவதாக அவர் பரபரப்பை ஏற்படுத்தினார். விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனில் அவரது பெயர் 'தளபதி வெற்றி கொண்டான்'. அதன் சுருக்கம் தான் டி.வி.கே.

இந்த நிலையில், கடந்த 18-ந் தேதி கூடிய தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் பங்கேற்க வந்த பல்லவி, சட்டசபை வளாகத்தில் உள்ள வருகைப்பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, அங்குள்ள பெண் எம்.எல்.ஏ.க்களுக்கான அறையில் சிறிது நேரம் இருந்துவிட்டு புறப்பட்டார்.

இந்த நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு கைக்குழந்தையுடன் வந்த பல்லவி, சட்டசபை கூட்டம் முடிந்து முதல்-அமைச்சர் விஜய் வீட்டுக்கு புறப்பட்ட நேரத்தில், அவரை சென்று சந்தித்தார்.

அப்போது, குழந்தையை வாங்கி உச்சிமுகர்ந்த முதல்-அமைச்சர் விஜய், குழந்தைக்கு 'தமிழ் வெற்றி கொண்டான்' என்று பெயர் வைத்தார். அதன் சுருக்கம் டி.வி.கே. ஆகும். இந்த நிலையில் மகனுக்கு 'டி.வி.கே.' என பெயர் சூட்ட வேண்டும் என்ற த.வெ.க. பெண் எம்.எல்.ஏ. பல்லவியின் ஆசை நிறைவேறிவிட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com