

செங்கல்பட்டு,
மாமல்லபுரத்தில் தவெக சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டார். அப்போது, குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500, மகளிருக்கு இலவச பேருந்து பயணம், திருமணத்துக்கு 8 கிராம் தங்கம் உட்பட மகளிருக்கான பல அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, தனது தனிப்பட்ட பிரச்சினை குறித்தும் மேடையில் விஜய் மனம் திறந்து பேசினார். இது தொடர்பாக விஜய் பேசியது பின்வருமாறு;
"சமீபத்தில் ஓடிக் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு நீங்கள் போராடி, ஹர்ட் (hurt) ஆவதை நான் பார்க்கிறேன். அதை பார்த்து எனக்கு ஹர்ட் ஆகிறது. அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்களும், நானும் மக்களின் பிரச்சினைகளை மட்டும் பார்ப்போம், சரியா.. ஹர்ட் ஆகாதீர்கள், வருத்தமெல்லாம் கிடையாது."
இவ்வாறு அவர் கூறினார்.