அஞ்சலை அம்மாள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை


அஞ்சலை அம்மாள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை
x

தமது வாழ்நாள் முழுவதும் அஞ்சாமையுடன் மக்கள் சேவையாற்றியவர் அஞ்சலை அம்மாள் என விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்து, தமது வாழ்நாள் முழுவதும் அஞ்சாமையுடன் மக்கள் சேவையாற்றியவர், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள். விடுதலைப் போராட்டக் களத்தில் அவரது போர்க்குணம் போற்றுதலுக்கு உரியது.

கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் பிறந்த நாளையொட்டி, பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story