'அரசர்களுக்கு எல்லாம் பேரரசர்' - பெரும்பிடுகு முத்தரையருக்கு விஜய் புகழாரம்


Vijay praises Perumbidugu Mutharaiyar
x

பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

சென்னை,

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பெரும்பிடுகு முத்தரையருக்கு தவெக தலைவரும் நடிகருமான விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள பதிவில்,

'தமிழ் நிலத்தில் போரில் வென்ற மன்னர்கள் வாகை மலர் சூடி மகிழ்வார்கள். அக்காலத்தில், தன்னுடைய போர்த்திற வெற்றியைத் தன்னம்பிக்கையுடன் உறுதி செய்து, போருக்குச் செல்லும் முன்பே வாகை மலர் சூடிச் சென்றவர், மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர்.

தோல்வியே காணாத வரலாற்றுச் சிறப்புமிக்க வாகை நாயகர். அரசர்களுக்கு எல்லாம் பேரரசராகத் திகழ்ந்த அரச வாகை கொண்ட பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பிறந்த நாளில், தமிழ் மண்ணுக்கும் தமிழர் உரிமைக்கும் அவர் ஆற்றிய சேவைகளைப் போற்றி மகிழ்வோம்' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

1 More update

Next Story