ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்

தேர்தலுக்கு 4 நாட்களுக்கு முன்பாக பணப்பட்டுவாடா தொடங்கிய நிலையில் இரு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் வினியோகித்தனர்.
ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்
Published on

சென்னை,

தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., அ.தி. மு.க.வின் ஆதிக்கம் எப்போதும் அதிகமாக இருக்கும். மாறிமாறி இரு கட்சிகளும் ஆட்சி செய்து வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜய் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. ஒவ்வொரு தொகுதியிலும் பல்வேறு நலத்திட்டங்களை செய்திருந்தாலும் அதையும் தாண்டி இரு கட்சிகளும் இந்த தேர்தலில் பணத்தை வாரி இறைத்துள்ளனர். தேர்தலுக்கு 4 நாட்களுக்கு முன்பாக பணப்பட்டுவாடா தொடங்கிய நிலையில் இரு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் வினியோகித்தனர். 60 சதவீதம் மக்களுக்கு இந்த பணம் கொடுக்கப்பட்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதன்படி ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் ரூ.15 கோடி செலவிடப்பட்டு உள்ளது. ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட பொதுமக்களில் பலர் குறிப்பிட்ட வாக்களிக்காமல் விஜய் கட்சியின் விசில் சின்னத்துக்கு வாக்களித்துள்ளனர். பணம் பெற்றவர்களும், பணம் பெறாதவர்களும் இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.கவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவே த.வெ.வுக்கு வாக்களித்ததாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். தவெ.க கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்று விஜய் கட்டளையிட்ட காரணத்தால் யாரும் பணம் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர். இதன் மூலம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்துக்கு விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com