தூத்துக்குடியில் விஜய் ரோடு ஷோ: அலை அலையாக திரண்ட தவெக தொண்டர்கள்

நெல்லை பிரசாரத்தை முடித்து கொண்டு விஜய் தூத்துக்குடி சென்றார்.
தூத்துக்குடியில் விஜய் ரோடு ஷோ: அலை அலையாக திரண்ட தவெக தொண்டர்கள்
Published on

தூத்துக்குடி,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்று நெல்லையில் பிரசாரம் மேற்கொண்டார். நெல்லையில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நெல்லை பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.

நெல்லை பிரசாரத்தை முடித்து கொண்டு விஜய் தூத்துக்குடி சென்றார். தூதுக்குடியில் விஜய் ரோடு ஷோ சென்று வாக்கு சேகரித்தார்.

ரோடு ஷோவில் விஜய்யை காண அக்கட்சி தொண்டர்கள் , மக்கள் அலை அலையாக கூடினர். திரண்டு நின்று விஜய்க்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com