எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போன்று விஜய் அரசியல் செய்ய வேண்டும்- ரோஜா

சினிமாவில் இருந்து வருபவர்கள் ‘டைம்பாஸ்' அரசியலுக்காக வருகிறார்கள் என ரோஜா பேசியுள்ளார்.
எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போன்று விஜய் அரசியல் செய்ய வேண்டும்- ரோஜா
Published on

சென்னை,

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்த ரோஜா, அரசியலில் குதித்தார். தெலுங்கானா மாநில மந்திரியாகவும் பதவி வகித்தார். தற்போது ஆளும்கட்சியை கடுமையாக விமர்சித்து வரும் ரோஜா, நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் குறித்து பேசியிருப்பது கவனம் ஈர்த்துள்ளது. அவர் பேசும்போது, சிலர் 'டைம்பாஸ்'க்கு அரசியலுக்கு வருகிறார்கள்.

ஒரு நாள் ஷூட்டிங், மறுநாள் ஆன்மிக பயணம் என பவன் கல்யாண் இருக்கிறார். அப்படி இருக்கவே கூடாது. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் வரும்போது நல்ல எண்ணத்தோடு வரவேண்டும். ஆந்திராவில் சிரஞ்சீவி கட்சி தொடங்கி அதன்பின் திடீரென அதை கொண்டு போய் காங்கிரசில் இணைத்துவிட்டார். அவரை நம்பி வந்தவர்கள் இப்போது நடுரோட்டில் நிற்கிறார்கள்.

இப்போது விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., ஜெயலலிதா மாதிரி இருக்க வேண்டும். சினிமாவில் இருந்து வந்த அவர்களை இப்போதும் நாம் பேசி கொண்டாடுகிறோம். இப்போது சினிமாவில் இருந்து வருபவர்கள் 'டைம்பாஸ்' அரசியலுக்காக வருகிறார்கள். விஜய் அப்படி இருக்கக்கூடாது. தனக்கு பின்னால் வரும் மக்களுக்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இறங்கி போராட வேண்டும். தொண்டர்களை பாதியில் விட்டுவிடக்கூடாது'', என்று குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com