சென்னையில் நாளை மறுநாள் விஜய் பிரசாரம்: 5 தொகுதிகளுக்கு செல்ல திட்டம்

சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை நாளை மறுநாள் பெரம்பூர் எம்.கே.பி நகர் பகுதியில் இருந்து காலை 10 மணிக்கு தொடங்குகிறார் விஜய்.
சென்னையில் நாளை மறுநாள் விஜய் பிரசாரம்: 5 தொகுதிகளுக்கு செல்ல திட்டம்
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாததால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றன.

சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிடும் என்று விஜய் கூறியுள்ளார். தவெக சார்பில் மார்ச் 27ஆம் தேதி (நாளை மறுநாள்) மாமல்லபுரத்தில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. தவெக வேட்பாளர்களை மேடையில் அறிமுகம் செய்து அந்தக் கட்சியின் தலைவர் விஜய் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

தேர்தல் நெருங்கும் நிலையில் விஜய் எப்போது பிரசாரத்தை தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் நிலவும் நிலையில், நாளை மறுநாள் (28ஆம் தேதி) விஜய் பிரசாரம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளில் விஜய் பிரசாரம் செய்ய உள்ளார். ஒவ்வொரு இடத்திலும் 3 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என தவெக சார்பில் அனுமதி கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 12 தொகுதிகளில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கோரப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com