கடலூரில் விஜய் நாளை பிரசாரம்: 16 நிபந்தனைகளுடன் அனுமதி

விஜய் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக பிரசாரம் செய்து வருகிறார்.



கடலூரில் விஜய்  நாளை பிரசாரம்: 16 நிபந்தனைகளுடன் அனுமதி
Published on

கடலூர்,

2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக பிரசாரம் செய்து வருகிறார்.

இன்று அவர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

இந்த நிலையில் கடலூரில் நாளை விஜய் பிரசாரம் செய்வதற்காக த.வெ.க. சார்பில் போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது. கடலூர் மஞ்சக்குப்பம் வடலூர். சேத்தியாத்தோப்பு. திட்டக்குடி, தொழுதூர் உள்ளிட்ட பகுதிகளில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கேட்கப்பட்டது.

இந்த நிலையில், விஜய் பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 16 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு பிரசாரம் தொடங்கி இரவு 9.30 மணிக்குள் முடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீசின் அனுமதியை தொடர்ந்து விஜய் நாளை கடலூர் மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். கடலூர் மாவட்டத்தில் பிரசாரத்தை தொடங்கும் அவர் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் பிரசாரம் மேற்கொள்வார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com