நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார் - அமைச்சர் என்.ஆனந்த்

ஊரக வளர்ச்சித் துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார் - அமைச்சர் என்.ஆனந்த்
Published on: 

சென்னை,

சென்னை கலைவாணர் அரங்கில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் மண்டல மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:-

நம்முடைய முதல்-அமைச்சரின் ஆட்சி இன்னும் 25 ஆண்டுகளுக்கு இருக்கும். நிரந்த முதல்-அமைச்சராக விஜய் இருப்பார். மக்களுடைய அடிப்படை வசதிகள்தான் அவருடைய கனவு. சுத்தமான குடிநீர், சுகாதாரம் தான் அவருடைய கனவு. அந்த கனவை நாம் நிறைவேற்றுவோம். நாம் எல்லாரும் ஒற்றுமையாக இருந்து அதை செய்ய வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. உங்களுடைய தேவைகளை கூறுங்கள். அது செய்து தரப்படும்.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 12,147 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்திலும் அடுத்த 5 ஆண்டுகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். நீங்கள் நினைத்தால் மட்டும்தான் அதை நிறைவேற்ற முடியும். ஊரக வளர்ச்சித் துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்கு நீங்கள்தான் காரணம்.

ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அடிப்படை பிரச்சினைகள் குறித்து டிரோன்கள் மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com