10, 12-ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விரைவில் விருது வழங்குகிறார் விஜய்

4-வது ஆண்டாக பரிசளிப்பு விழா விரைவில் நடக்க இருக்கிறது.
10, 12-ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விரைவில் விருது வழங்குகிறார் விஜய்
Published on

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே 10, 12-ம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறார். அந்தவகையில் 4-வது ஆண்டாக பரிசளிப்பு விழா விரைவில் நடக்க இருக்கிறது.

இந்த ஆண்டு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்தவில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் பரிசு வழங்க இருக்கிறார். இதற்காக மாவட்ட அளவில் மாணவர்களின் தகவல்களை சேகரிக்கும் பணியில் தவெக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பட்டியல் தயார் செய்யப்பட்ட பிறகு, தேதி முடிவு செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்வு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்க இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com