சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் குட்டி கதை கூறிய விஜய்

தமிழ்நாட்டு மண். தாயன்பு கொண்ட மண். ஒரு தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒன்றுதானே என தவெக தலைவர் விஜய் கூறினார்.
சென்னை,
மாமல்லபுரம் கிறிஸ்துமஸ் விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது:-
அன்பும், கருணையும் இருக்கும் மனசு தான் தாய் மனசு, உண்மையான நம்பிக்கை நல்லிணக்கத்தை விதைக்கும் என்றார். அதனை தொடர்ந்து ஜோசப் கதையை பற்றி விஜய் கூறினார். அதில்,
பைபிளில் நிறைய கதைகள் உண்டு. குறிப்பாக ஒரு கதையில், ஒரு இளைஞருக்கு எதிராக சொந்த சகோதரர்களே பொறாமைப்பட்டு பாழுங்கிணற்றில் தள்ளிவிடுவார்கள்.பின் அந்த இளைஞர் மீண்டு வந்து அந்த நாட்டுக்கே அரசனாகி தனக்கு துரோகம் செய்த தனது சகோதரர்கள் மட்டுமின்றி அந்த நாட்டையே காப்பாற்றிய நிறைய கதைகள் உண்டு.
கடவுளின் அருளும், மக்களை மானசீகமாக நேசிக்கும் அன்பும், அதீத வலிமையும், உழைப்பும் இருந்துவிட்டாலே போதும்.. எவ்வளவு பெரிய எதிரிகளையும் ஜெயிக்கலாம் என்பதையே இக்கதைகள் உணர்த்துகின்றன. படிக்காதவங்க படிச்சி பாருங்க என்றார்.
Related Tags :
Next Story






