தவெக கொள்கை தலைவர்களின் சிலைகளை திறந்து வைத்தார் விஜய்

கொள்கைத் தலைவர்களின் சிலைகளை திறந்து வைத்த விஜய், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Published on

சென்னை,

நடிகர் விஜய் கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமான மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில், கட்சியின் கொள்கை தலைவர்களாக தந்தை பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் பெயர்களை அவர் அறிவித்தார்.

இந்த நிலையில், கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று கட்சி கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, கட்சியின் கொள்கை தலைவர்களாக அறிவிக்கப்பட்ட பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலைகளை விஜய் திறந்து வைத்து ஒவ்வொரு சிலைக்கும் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து நல உதவிகளையும் விஜய் வழங்க உள்ளார். மேலும் தனது சுற்றுப்பயண விவரத்தையும் விஜய் அறிவிக்க இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com