விஜய் அலை: தவெகவின் கோட்டையாக மாறிய சென்னை

உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியிலும், சேகர்பாபு துறைமுகம் தொகுதியிலும் தொடர்ந்து 2 வது முறையாக வெற்றி பெற்றுள்ளனர்
விஜய் அலை: தவெகவின் கோட்டையாக மாறிய சென்னை
Published on

சென்னை,

சென்னை உள்ள 16 தொகுதிகள் தி.மு.க. கோட்டையாக இருந்த நிலையில் தற்போது த.வெ.க.வின் கோட்டையாக மாறியுள்ளது. வட சென்னையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி, துறைமுகம் ஆகிய தொகுதிகளில் தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று 2 தொகுதிகளை தக்க வைத்தது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் டி‌.செல்வம் தொடக்கத்தில் முன்னணியில் இருந்தார். தி.மு.க. வேட்பாளரான உதயநிதி ஸ்டாலின் முதல் 2 சுற்றுகள் பின்தங்கி இருந்தார். அதன்பின் 3, 4, 5,6 சுற்றுகளில் த.வெ.க. வேட்பாளரை விட உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் இருந்தார்.

7-வது, 8-வது சுற்றுகளில் த.வெ.க. வேட்பாளர் முன்னணியில் இருந்தார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையிலேயே இருந்து இறுதியில் வெற்றி பெற்றார்.இதேபோல் துறைமுகம் தொகுதியில் தி.மு.க.வேட்பாளர் அமைச்சர் சேகர் பாபு முதலில் பின்தங்கி இருந்த நிலையில் அடுத்தடுத்து சுற்றுகளில் த.வெ.க. வேட்பாளர் சினோரா அசோக்கைவிட அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியிலும், சேகர்பாபு துறைமுகம் தொகுதியிலும் தொடர்ந்து 2 வது முறையாக வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் அமைச்சர் முக ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் தோல்வியை தழுவியது திமுகவிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com