விஜய் எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்.. பிரேமலதா பரபரப்பு பேச்சு

ஒரு வார்த்தை நான் சொல்லியிருந்தால் விஜய் என் வீடு தேடி வந்து துணை முதல்வர் பதவி கொடுத்து இருப்பார் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்
Published on

சென்னை,

தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகான முதல் கூட்டம் என்பதால் கட்சியின் செயல்பாடு, சீர்திருத்தம் உள்ளிட்டவை குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது: விஜய் ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே பல்வேறு சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. தேமுதிக என்றால் பேரம் பேரம் என்று சொன்னீர்களே.. இப்போது சொல்கிறேன்.. எந்த பேரத்திற்கும் எந்த பதவிக்கும் ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிகதான் என்பதை நாங்கள் நிரூபித்திருக்கிறோம்.

நான் நினைத்திருந்தால்

பதவிக்கோ, பணத்திற்கோ, சோபா செட்டிற்கோ, பெட்டிக்கோ எதற்கும் ஆசைப்படாமல் பயணிக்கும் கூட்டணிக்கு விசுவாசமாக, உண்மையாக இருக்கிற கட்சி தேமுதிகதான். நான் நினைத்திருந்தால் விஜய்யை சந்தித்திருக்க மாட்டேனா.. அமைச்சர் பதவிக்காக எல்லாரும் ஓடுகிறார்கள். ஒரு வார்த்தை நான் சொல்லியிருந்தால் விஜய்யே வீடு தேடி வந்து துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார். இதுதான் உண்மை. ஆனால், இதுக்கெல்லாம் ஆசைப்படும் கட்சி அல்ல தேமுதிக.

கூட்டணி தர்மம்

என்றைக்கும் நாம் கொண்ட கொள்கை, கூட்டணி தர்மம், நாம் எடுத்துக்கொண்ட பாதையில் உறுதியாக இருப்போம் என்பதற்கு அத்தாட்சி இதுதான்.கூட்டணி தர்மத்தை மதித்த கட்சிதான் தேமுதிக. 2026 தேர்தலுக்கு முன்பு வரை அதிமுக கூட்டணியில்தான் பயணித்தோம். 2024ல் அதிமுகவுடன் எந்த கட்சி துணை நின்றது என்பதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல வேண்டும். அன்று எல்லாரும் சுயநலத்திற்காக உங்களை விட்டு ஓடினார்கள். ஆனால் நாங்கள் கூட்டணி தர்மத்தை மதித்தோம். உங்களுடன் அன்று நின்ற ஒரே கட்சி தேமுதிக. ஏன், எங்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போகத் தெரியாதா? இவ்வாறு அவர் பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com