தவெகவில் வரும் 29-ம் தேதி இணைகிறார் விஜயபாஸ்கர்

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அமைச்சரும் தவெக பொதுச்செயலருமான ஆனந்த் உடன் சி.விஜயபாஸ்கர் சந்தித்து பேசினார்.
 விஜய பாஸ்கர்
Published on

சென்னை,

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக, திமுகவுக்கு அடுத்து 3 வது இடத்தை அதிமுக பிடித்ததால், அக்கட்சியில் பலர் அதிருப்தி அடைந்தனர்.

ராஜினாமா

குறிப்பாக எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் பிரிந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியை உருவாக்கினர். தங்கள் ராஜினாமா கடிதத்தையும் வழங்கினர்.

இதன் பிறகு நடந்த சமாதான பேச்சுக்கு பிறகு எஸ்.பி. வேலுமணி தலைமையில் சில உறுப்பினர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாகத் திரும்பினர். எனினும் சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் இபிஎஸ்ஸை சந்திப்பதை தவிர்த்து வந்தனர்.

அதிமுக அதிருப்தி அணி

இதனிடையே தனது எம்.எல்.ஏ. பதவியை விஜயபாஸ்கர் ராஜினாமா செய்தார். அதிமுக அதிருப்தி அணியில் இருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து விஜயபாஸ்கரும் தவெகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியானது.

தவெக

முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை சந்திப்பதற்கு விஜயபாஸ்கர் நேரம் கேட்டுள்ளதாகவும் கூறப்பட்டுவரும் நிலையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அமைச்சரும் தவெக பொதுச்செயலருமான ஆனந்த் உடன் சி.விஜயபாஸ்கர் நேரில் சந்தித்தார்.

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அதிமுகவில் இருந்தும் விலகி, ஆதரவாளர்களோடு வரும் திங்கட்கிழமை வரும் 29-ம் தேதி தவெகவில் இணைகிறார். திருவான்மியூர் தனியார் மண்டபத்தில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெகவில் விஜயபாஸ்கருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com