

சிவகிரி:
சிவகிரி நகர தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் அய்யாச்சாமி, நகர பஞ்சாயத்து முன்னாள் துணைத்தலைவர் பாபு என்ற கணேசன், நகர பொருளாளர் முனியாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் சோலை கனகராஜ் கலந்து கொண்டு கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.