இளகிய மனம் கொண்டவர் விஜயகாந்த் - நிர்மலா சீதாராமன் புகழாரம்

பாகுபாடு பார்க்காத மனிதநேயமிக்க அரசியல்வாதி விஜயகாந்த் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் புகழாரம் சூட்டினார்.
இளகிய மனம் கொண்டவர் விஜயகாந்த் - நிர்மலா சீதாராமன் புகழாரம்
Published on

சென்னை,

சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின்னர் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகையில்,

கஷ்டங்களை பார்க்க முடியாத அளவுக்கு இளகிய மனம் கொண்டவர் விஜயகாந்த். அனைவரின் கஷ்டங்களையும் உணர்ந்து அவர்களுக்கு மரியாதை கொடுத்தவர் விஜயகாந்த். அரசியலில் விஜயகாந்தைபோல மனிதநேயம் கொண்ட ஒரு தலைவரை பார்ப்பது அரிது. தன் பணத்தால் மக்களுக்கு உதவக்கூடிய நல்ல தலைவரை நாம் இழந்துவிட்டோம். மத்திய அரசின் சார்பாக அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி என்னை அனுப்பி வைத்தார்.

விஜயகாந்த் வீட்டிற்கு சென்றவர் உணவருந்தாமல் திரும்ப முடியாது; பாகுபாடு பார்க்காத மனிதநேயமிக்க அரசியல்வாதி. இன்றைய தேதிக்கு இப்படிப்பட்ட அரசியல் தலைவர் நம்முடன் வாழ்ந்தாரா? என அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com