‘மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்தவர் விஜயகாந்த்’ - த.வெ.க. தலைவர் விஜய்


‘மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்தவர் விஜயகாந்த்’ - த.வெ.க. தலைவர் விஜய்
x

புரட்சிக் கலைஞருக்கு தனது புகழஞ்சலியை செலுத்துவதாக விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது மறைவு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தே.மு.தி.க. தொண்டர்களும் திரண்டு வந்து விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் த.வெ.க. தலைவர் விஜய் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் அவரை வணங்குகிறேன். புரட்சிக் கலைஞருக்கு என் புகழஞ்சலி” என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story