ஆண்டாள் விவகாரம் வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம், உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என விஜயகாந்த் அறிவித்து உள்ளார். #Vijayakanth #Vairamuthu #AndalControversy
ஆண்டாள் விவகாரம் வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம், உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா சாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆண்டாள் விவகாரம் தொடர்பாக வைரமுத்துவுக்கு தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்தார். மேலும் ஸ்ரீவில்லிபுத்துர் சன்னதிக்கு வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள ஜீயருக்கும் ஆதரவை தெரிவித்து உள்ளார். ரஜினி மற்றும் கமல் அரசியல் பயணம் தொடர்பாக பேசுகையில், ரஜினியும், கமலும் அரசியலில் எனக்கு ஜூனியர்கள், நான் சீனியர் என குறிப்பிட்டார்.

தமிழகத்தில் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் எனவும் விஜயகாந்த் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com