

சென்னை,
தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்து மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ஏழை மக்களின் மேல் கொண்ட அளவற்ற அன்பால் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் எனது அருமை நண்பரும் தே.மு.தி.க. நிறுவனருமான கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் இன்று.
அவரின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் அன்புச்சகோதரி பிரேமலதா விஜயகாந்த் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கேப்டன் அவர்களின் புகழ் நீடுவாழ்க.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.